Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“டி.டி.வி.தினகரனால் கொஞ்ச நாளைக்குத்தான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை அனுபவிக்க முடியும். அதற்குமேல் ஆண்டவன் பார்த்துக்கொள்வான். அது எப்படியென்று அனைவருக்கும் தெரியும். இந்த ஆட்சி கலையாது; இந்த ஆட்சியை கவிழ்க்கவும் முடியாது; இந்த கட்சியையும் உடைக்க முடியாது.” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசும் போதே முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் பேசியுள்ளதாவது, “நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தேர்தல், ஒரு வித்தியாசமான தேர்தல். எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் வராத எண்ணம் கொண்ட ஒரு வித்தியாசமான தேர்தல்தான் இந்த ஆர்.கே.நகர் தேர்தலாகும். இப்பொழுது ‘ஆர்.கே.நகர் பார்முலா’ என்ற ஒரு பார்முலாவை கண்டுபிடித்து, தில்லுமுல்லு செய்து டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றிருக்கின்றார். அந்த பார்முலா ‘ஹவாலா பார்முலா’. இதுவரைக்கும் யாரும் சிந்தித்ததுகூட கிடையாது. உழைக்காமலேயே முன்னுக்கு வந்தவர் என்று சொன்னால், அது டி.டி.வி.தினகரன் ஒருவர்தான். அவர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அம்மா வீட்டிலே தங்கியிருந்து, அம்மாவிற்கு உதவி செய்தார். அந்த உதவியின் மூலமாக கொல்லைப்புறத்தின் வாயிலாக உள்ளே புகுந்தவர்தான் இந்த டி.டி.வி.தினகரன். இவர் முதல்முறையாக வெற்றி பெற்ற இடத்தில், அடுத்தமுறை போட்டியிட்டு தோற்றார். எப்பொழுது பார்த்தாலும் ‘ஸ்லீப்பர் செல்’ என ஒன்றை சொல்லிக்கொண்டிருக்கிறார். அதை, இதற்கு முன்னால் யாருமே கண்டுபிடிக்கவில்லை.

இவர்கள் எப்பொழுது வந்தார்களோ அதற்கு பிறகு புதுப்புது பெயர்கள் வைத்திருக்கிறார்கள். உங்களிடத்திலே இருப்பவர்கள் வேண்டுமானால் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம். எங்களிடத்திலே இருக்கின்ற அத்தனைபேரும் பத்தரைமாற்று தங்கமாக விளங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சொல், கிரிமினல் கண்டுபிடித்தது என அமைச்சர் வீரமணி குறிப்பிட்டார். ஏனென்றால், அவர்களுக்குத்தான் அப்படிப்பட்ட நிலைமையெல்லாம் வரும். அப்படிப்பட்ட புத்தி கொண்டவர்கள்தான் அவர்கள். அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், கொஞ்ச நாளைக்குத்தான் அந்த பதவியை அனுபவிக்க முடியும். அதற்குமேல் ஆண்டவன் பார்த்துக்கொள்வான். அது எப்படியென்று உங்களுக்கு தெரியும். இந்த ஆட்சியும் கலையாது; இந்த ஆட்சியை கவிழ்க்கவும் முடியாது; இந்த கட்சியையும் உடைக்க முடியாது. ஹவாலா பார்முலா மூலம் வெற்றிபெற்ற ஒரு ஆள், இந்த ஆட்சியை மார்ச் மாதத்திற்குள் கலைப்பேன் என்கிறார். நீ இருந்தால்தானே கலைப்பாய், எங்கிருப்பாய் என்று பார்த்துக்கொள்ளலாம்.” என்றுள்ளார்.

0 Responses to டி.டி.வி.தினகரனால் சிறிது காலத்துக்குத்தான் பதவியை அனுபவிக்க முடியும்: எடப்பாடி பழனிசாமி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.