Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேசம் மற்றும் ஐ.நா இன் எதிர்ப்பை மீறி ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்ததுடன் டெல் அவேவ் இலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை அங்கு இடம் மாற்றப் போவதாகவும் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து ஜெருசலேம் தொடர்பில் அமெரிக்கா தன்னிச்சையாக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தடை செய்ய ஏற்ற விதத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பு நடத்தத் தீர்மானிக்கப் பட்டது. இது தொடர்பான மசோதாவை

சனிக்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபையில் எகிப்து தாக்கல் செய்திருந்தது. மேலும் நேற்று திங்கட்கிழமை காலை இது தொடர்பில் வாக்கெடுப்பும் நடத்தப் பட்டது.

இதில் மொத்தம் உள்ள 15 உறுப்பு நாடுகளிலும் அமெரிக்கா மட்டுமே தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய போதும் ஏனைய 14 நாடுகளும் எதிராக வாக்களித்திருந்தன. மேலும் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரம் பற்றிக் கருத்துத் தெரிவித்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூட் அப்பாஸ் இது சர்வதேச சமூகத்துக்கு அவமரியாதையயும் அச்சுறுத்தலையுமே காட்டுகின்றது எனவும் இதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் இந்த வாக்கெடுப்பு தொடர்பில் அதிருப்தி அடைந்த ஐ.நா இற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹலே அமெரிக்கா தனது தூதரகத்தை எங்கு அமைக்க வேண்டும் என்பது தொடர்பில் சர்வதேசம் தலையிடத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் ஜெருசலேம் நிலைப்பாடு தொடர்பாக இஸ்ரேலும் பாலஸ்தீனமும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டே சமரசத்துக்கி வர வேண்டும் எனவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப் பட்டது.

0 Responses to ஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் வாக்கெடுப்பு

Post a Comment

Followers