Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முப்பது வருடங்கள் பழமையான இலஞ்ச ஊழல் சட்டத்தில் காலத்துக்குப் பொருத்தமான வகையில் திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார். இந்தத் திருத்தம், பழைய சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி வெளியில் நடமாடும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் கொண்டுவருவதற்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இனிமேலும் தப்ப முடியாது எனக்குறிப்பிட்ட அவர், மேற்படி சட்டத்தில் நிலவும் குறைபாடுகள் நீக்கப்பட்டு புதிய சட்ட நியதிகளை அதில் உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேசத்தின் உதவியுடன் முக்கிய பல மாற்றங்களுடன் புதிய விடயங்கள் இணைக்கப்பட்டு பெரும் மாற்றத்துடன் காலத்துக்குப் பொருத்தமான வகையில் மேற்படி இலஞ்ச ஊழல் சட்டம் முழுமையாக திருத்தத்துக்கு உள்ளாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்தத் திருத்தத்தில் உள்ளீர்க்கப்படவுள்ள சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் தொடர்பில் நிபுணர்கள் குழு கலந்துரையாடி வருகிறது எனக் குறிப்பிட்ட சரத் ஜயமான்ன, சில மாதங்களில் திருத்தங்களுடனானா புதிய இலஞ்ச ஊழல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலஞ்ச, ஊழல் சட்டத்தில் நிலவும் குறைபாடுகள் நிவர்த்திக்கப்படுவதே முக்கிய நோக்கம் எனத் தெரிவித்த அவர், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மேற்படி சட்டத்தில் சிறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாயினும், அதில் தேவையானளவு மாற்றங்கள் இடம்பெறவில்லை. அதனால் பல பாரிய நிதி மோசடிகள் கோடிக்கணக்கான வளங்கள் மோசடிகள் வெளிவராமலேயே உள்ளன. சொத்துக்கள் வெளியிடப்படாத பலருக்கு 1000 ரூபா போன்ற சிறு தண்டப் பணமே அறவிடப்படுவதற்கு அந்த சட்டத்தில் நிலவும் குறைபாடுகளே முக்கிய காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் காலம் தாழ்த்தப்பட்ட மேற்படி இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நிபுணர்கள் குழுவும் சர்வதேசமும் அறுவுறுத்தியுள்ளமைக்கு அமைய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம்: சரத் ஜயமான்ன

Post a Comment

Followers