Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்துள்ள வலுவான ஆதரவை குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தலில் பா.ஜ.க, பெற்றுள்ள வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்துள்ள வலுவான ஆதரவையே குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது. இதற்காக கடுமையாக உழைத்த பா.ஜ., தொண்டர்கள் அனைவரையும் வணங்குகிறேன். அவர்களின் கடினமான உழைப்பு தான் வாக்காளர்களை கவர்ந்துள்ளது.

பா.ஜ.க, மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மக்களை தலை வணங்குகிறேன். இந்த மாநிலங்களின் வளர்ச்சி பாதையில் உள்ள தடைக்கற்களை நாங்கள் அகற்றுவோம் என உறுதி அளிக்கிறேன். மக்களுக்காக அயராது உழைப்போம்.” என்றுள்ளார்.

0 Responses to வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்துள்ள வெற்றி: மோடி

Post a Comment

Followers