Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

2001-2004 காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல, பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு தாவி அமைச்சர் பதவியைப் பெற்றார். அவர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில், அரசாங்கப் பேச்சாளராகவும் பதவி வகித்திருந்தார்.

தற்போது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 Responses to கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்?

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.