Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த சில தினங்களாக பங்காளி கட்சிகள் மற்றும் கட்சிகளிடையேயும் உறுப்பினர்களாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தொடர்ந்து ஆலோசனைகள் இடம்பெற்றுவருகின்றது. அநேகமான சபைகள் தொடர்பில் வேட்பாளர் பட்டியலில் இணக்கம் எட்டப்பட்டிருக்கின்றது. மக்கள் மத்தியில் இத்தேர்தல் தொடர்பில் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றார்கள்.

சாவகச்சேரி நகரசபை வேட்பு மனுதாக்கல் தொடர்பில் எழுந்த பிரச்சனை தற்பொழுது தீர்க்கப்பட்டிருக்கின்றது. மற்ற இடங்களிலும் இப்படியான குழப்பங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்த போதிலும் நாங்கள் தற்பொழுது ஒவ்வொரு இடங்களிலும் பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டு வருகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும்: சுமந்திரன்

Post a Comment

Followers