Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். மாநகர சபைக்கான தேர்தலில் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர் என்.வித்தியாதரனை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தப் பொது அணியில் சமூக அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் சில ஒன்றிணைந்துள்ளன. அவர்களின் ஆதரவுடனேயே வித்தியாதரனை களமிறக்க பேச்சுகள் இடம்பெறுகின்றன.

தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவதற்கு தற்போது பேச்சுகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் ஆதரவைப் பெறுவதற்கும் முயற்சிகள் இடம் பெறுவதாக அறியமுடிகின்றது. வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன், இந்து அமைப்பான சிவசேனை இந்த அணியுடன் இணையாமல் ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனையே நியமிக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வலியுறுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசு கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக என்.வித்தியாதரன் போட்டி?!

Post a Comment

Followers