ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைந்துள்ள கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா, என்பது தொடர்பில் முடிவு செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலம், குறித்தும், அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கம் வகிப்பதா இல்லையா என்பது குறித்தும், இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் டி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

0 Responses to கூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா?; சுதந்திரக் கட்சி ஆராய்வு!