Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்கவில்லை. சர்வதேச சதிகளினால் வீழ்த்தப்பட்டேன். இன்றும் எனக்கே மக்கள் செல்வாக்கு உள்ளது.” என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“புதிய அரசியலமைப்பினூடாக நாட்டினை துண்டாடும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும். இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில் தலைமை தாங்க நாம் தயார்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மக்கள் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை ஹோமாகமை பிரதேசத்தில் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் நான் தோற்கவில்லை; சர்வதேச சதியினால் வீழ்த்தப்பட்டேன்: மஹிந்த

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.