கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள 1515.07 ஏக்கர் காணிகளில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவிப்பதாக இராணுவத்தினர் கடந்த வருடம் உறுதியளித்த போதிலும், அந்தக் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களிடம் கூறியுள்ளதாவது,
“கடற்படையினரின் பிடியிலுள்ள இரணைதீவை விடுவிக்கக்கோரி, அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் கடந்த மே மாதம் 01ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் தயாராகவில்லை.
அதைவேளை, கிளிநொச்சி நகரப் பகுதியில், நீர்த்தாங்கி அமைந்திருந்த காணியை இராணுவத்தினர் விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ள போதும், அங்குள்ள பழைய நீர்த்தாங்கியை அகற்றுவதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள 1515.07 எக்கர் காணியை மக்களிடம் மீள வழங்குவற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். எனினும், இதுவரை ஒரு துண்டு காணி கூட கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களிடம் வழங்கப்படவில்லை. கிளிநொச்சி நகரில் வீழ்த்தப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி மட்டும், கட்டுப்பாட்டிலிருந்து கரைச்சிப் பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரணைமடு படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள சுமார் 1,200 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் எனவும் இராணுவத் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால், அது கிளிநொச்சி மாவட்டத்துக்குள் சேராது. அது முல்லைத்தீவு மாவட்டத்துக்குளேயே சேரும்.” என்றுள்ளார்.

0 Responses to கடந்த வருடம் வாக்குறுதியளித்த இராணுவம், காணிகளை இன்னமும் விடுவிக்கவில்லை: சிவஞானம் சிறிதரன்