மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயா தொலைக்காட்சி முதன்மை அதிகாரி விவேக் ஜெயராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவின் மகள் தான் என குறிப்பிட்டு அம்ருதா என்ற பெண் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் அம்ருதா குறித்து விவேக் ஜெயராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவித்துள்ளதாவது, “தமிழகத்தின் முகமாக விளங்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாகவும் ஜெயலலிதா விளங்கினார். மக்களிடையே மிகுந்த மரியாதையுடன் வாழ்ந்த ஜெயலலிதா மீது பல்வேறு விதமாக அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதாவின் மரியாதையை குறைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் ஏற்க முடியாது. ஒன்றரை வயதில் தந்தையை பிரிந்த எனக்கு அன்னையாக விளங்கியவர் ஜெயலலிதா. சுதாகரனை தத்தெடுத்த போது வெளிப்படையாகவே அறிவித்தார். வாரிசு பிறந்திருந்தால் ஜெயலலிதாவே அறிவித்திருப்பார். அவருக்கென்று யார் இருந்தாலும் வெளிப்படையாக சொல்லியிருப்பார். அம்ருதா அவரது மகள் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ” என்றுள்ளார்.

0 Responses to முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்தால் சட்ட நடவடிக்கை: விவேக் ஜெயராமன்