பிராந்தியத்தில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த மானிட சமூகத்தின் வறுமையையும் இல்லாதொழிப்பதற்கு அனைவரினதும் ஒருங்கிணைத்த ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பான நடவடிக்கையும் அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலகில் எந்தவொரு நபரும் பசியுடன் காணப்படாத வகையில் செயற்படவேண்டியது உலக நாடுகளின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வறுமையை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் இவ்வருடம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனுடன் இணைந்ததாக 2018ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி வருடமாகவும் பெயரிடப்பட்டுள்ளதென்றும் ஜனாதபதி கூறியுள்ளார்.
ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா வலய நாடுகளின் அமைப்பு எனப்படும் பிம்ஸ்டெக் அமைப்பின் மூன்றாவது கூட்டத்தொடரின் அமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நேற்று புதன்கிழமை ஆரம்பித்தது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு மற்றும் தென்கிழக்காசிய வங்காள விரிகுடா பிராந்தியத்தின் ஏழு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

0 Responses to உலகில் வறுமையை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நவடிக்கை அவசியம்: மைத்திரிபால சிறிசேன