Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்தும், சில இடங்களில் தனித்தும் போட்டியிடவுள்ளது. காரைதீவு மற்றும் மண்முனைப்பற்று பிரதேச சபைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளது.

ஏனைய சபைகளில் யானைச் சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து போட்டியிடவுள்ளது.

இது தொடர்பிலான இணக்கப்பாடு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை காணப்பட்டுள்ளது.

0 Responses to முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க.வோடு இணைந்தும், தனித்தும் போட்டி!

Post a Comment

Followers