Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- கூட்டு எதிரணி (மஹிந்த அணி) ஆகியவற்றுக்கு இடையிலான இணைவினை தடுப்பது பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்கவும், நாமல் ராஜபக்ஷவுமே என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றார். ஆனால், சுதந்திரக் கட்சியுடன் இணைய விரும்புபவர்களையும், இணைய விடாது தடுப்பது வேறு யாரும் இல்லை பிரசன்ன ரணதுங்கவும், நாமல் ராஜபக்ஷவுமே. பொதுஜன பெரமுன எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தலாம் என எண்ணுகின்றனர். தேர்தலில் சுதந்திரக் கட்சியே வெற்றிபெறும், சுதந்திரக் கட்சியில் இணைய விரும்புபவர்களை நாம் புறக்கணிக்கப் போவதில்லை. தற்போதும் சிலர் இணைந்த வண்ணமே உள்ளனர்.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரி- மஹிந்த இணைவை தடுப்பது பிரசன்னவும், நாமலுமே; தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு!

Post a Comment

Followers