Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடக்கு மாகாணமே வறுமை கூடிய மாகாணமாக உள்ளது. வறுமையைத் தணித்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய தார்மீக கடப்பாடு எம் அனைவரையும் சார்ந்ததாகும்.” என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக நன்மை கிடைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து, நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்து, வடக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தியின் ஊடாக வறுமையை ஒழிப்பதற்கான கூட்டு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற, 2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே க.சிவநேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2018ஆம் ஆண்டு மீண்டுவரும் செலவீனத்துக்காக 880.80 மில்லியன் ரூபாயும் மூலதனச் செலவீனத்துக்காக 473.50 மில்லியன் ரூபாயும் எமது அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது, வறுமை கூடிய மாகாணமாக உள்ளது. வறுமையைத் தணித்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய தார்மீக கடப்பாடு எம் அனைவரையும் சார்ந்ததாகும். மக்களின் வாழ்வாதார திட்டங்களை மேம்படுத்தக் கூடிய துறைகளான விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் எமது அமைச்சின் நிர்வாகப் பரப்பினுள் உள்ளன.

பொருளாதார ரீதியாக நன்மை கிடைக்கக்கூடிய திட்டங்களை முன்னெடுத்து நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்து பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களை உருவாக்க முடியும். உள்நாட்டு சந்தை வாய்ப்பு வசதிகள் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கு எமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

வாழ்வாதார உற்பத்தி செயற்பாடுகளின் போது அரச மற்றும் தனியார் பங்களிப்பு மற்றும் முயற்சியாண்மையாளர் பங்களிப்பு என்பவற்றைப் பெற்றுக் கொள்வதுடன், அமைச்சினூடாக உருவாக்கப்பட்டு வரும் விவசாயம், கால்நடை, நீர்ப்பாசனம், சுற்றாடல் மற்றும் மீன்பிடி தொடர்பான நியதிச் சட்டங்கள் மூலம் துறை சார்ந்த கட்டமைப்புக்களை உருவாக்கி சட்டரீதியாக நிர்வாக கட்டமைப்புகளை பலப்படுத்தி, எமது மாகாணத்தின் அபிவிருத்தியை முன்னெடுத்தல் அவசியமானதாகும்.

எமது மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான எம்மிடமுள்ள வளங்கள் பலவற்றை நாம் இன்னும் இனங்காண வேண்டியுள்ளது. அவற்றில் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய வருமான வழிவகைகளையும் உரிய ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து செயற்படுத்தவேண்டிய தேவையும் காணப்படுகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டிலுள்ள மாகாணங்களிலேயே வடக்கு மாகாணமே வறுமை கூடியது: க.சிவநேசன்

Post a Comment

Followers