Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராமநாதபுரத்தில் வரும் பெப்ரவரி 21ஆம் திகதி தன்னுடைய கட்சிப் பெயரை அறிவிக்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை:

“என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்திற்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். நன்றியை தாண்டி கடமைகள் நிறைய இருக்கிறது. அக்கடமைகளின் துவக்கமாக மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி துவக்க இருக்கிறேன். மக்களுடனான இந்த சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சி கழகமோ அல்ல, என் புரிதல் எனக்கான கல்வி. இதை மக்களோடு மக்களாக நின்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் இராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21ஆம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தை துவக்க இருக்கிறேன்.

இது என் நாடு. இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரம் அன்று. பின்பற்றவே தலைவன் இருக்க வேண்டும். பின்தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்க வேண்டும். நாம் எல்லாம் சேர்ந்து இந்த தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களை சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். இது ஆட்சியை பிடிப்பதற்கான திட்டமா என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு குடி அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதற்கான பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்த பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்.” என்றுள்ளார்.

0 Responses to பெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கமல்ஹாசன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.