Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

திருவிழா தொடர்பான கலந்துரையாடல் யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கடந்த வருடத்தைப் போன்று இம்முறையும் முன்னெடுக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான திட்டங்களை வகுக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை, தமிழக மீனவர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் நிகழ்வாக கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா அமைந்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்கவில்லை. எனினும் இந்த முறை பங்கேற்பதற்காகன நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இராமேஸ்வரம் பங்குத்தந்தை அந்தோனிச்சாமி குறிப்பிட்டார்.

0 Responses to கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி 23, 24ஆம் திகதிகளில்!

Post a Comment

Followers