Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவின் மந்திரம் பலிக்காது என்று அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில மன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசம், குஜாரத், இமாச்சலபிரதேசம் என தொடர்ந்து பல்வேறு மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் வெற்றிவாகை சூடி வரும் பாரதிய ஜனதா கட்சி, கர்நாடக மாநிலத்திலும் அதேபோன்று வெற்றியை பதிவுசெய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னரே துவக்கி செயல்படுத்தி வருகிறது.

இதனிடையே, ஆண்டின் இறுதிநாளில், காங்கிரஸ் கட்சியினரிடையே உரையாற்றிய முதல்வர் சித்தராமைய்யா, நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு மீண்டும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வோம் என்று இந்த புத்தாண்டு நாளில் உறுதிஏற்க வேண்டும் என்று கூறினார். அமித் ஷாவின் தேர்தல் வியூகம் கர்நாடகாவில் பலிக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

0 Responses to கர்நாடகாவில் அமித் ஷாவின் மந்திரம் பலிக்காது: சித்தராமையா

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.