Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முஸ்லிம் பெண்கள் ஆண்கள் துணையின்றி ஹஜ் யாத்திரைக்கு தனியாக செல்லலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  ‘மன்கி பாத்’நிகழ்ச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் கூறியுள்ளதாவது, “முஸ்லிம் பெண்கள் ஆண்களின் பாதுகாப்புடன்தான் ஹஜ் புனித யாத்திரை செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு பல ஆண்டுகளாக இருக்கிறது. இது, முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இந்த கட்டுப்பாடு பற்றி முதலில் நான் கேள்விப்பட்டபோது, இதுபோன்ற விதிமுறையை யார் வகுத்து இருப்பார்கள் என நினைத்து ஆச்சர்யப்பட்டேன். ஏன் இந்த முரண்பாடு? இந்த விஷயத்தை இன்னும் ஆழமாக சென்று ஆராய்ந்து பார்த்தபோது, எனக்கு மேலும் ஆச்சர்யம் ஏற்பட்டது.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இதுபோன்ற கட்டுப்பாடு இருந்து வந்துள்ளது. இதன்மூலம், முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், அது பற்றி யாருமே கவலைப்படவும் இல்லை; அதைப் பற்றி விவாதிக்கவும் இல்லை. இதுபோன்ற நடைமுறை பல முஸ்லிம் நாடுகளில் கூட இல்லை. எனவே, இந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதன்படி, 45 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் இனிமேல் ஆண்கள் பாதுகாப்பின்றி ஹஜ் யாத்திரைக்கு தனியாக செல்லலாம். இந்த கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்டது சிறிய விஷயமாக இருக்கலாம். ஆனால், ஒரு சமூகம் என்று பார்க்கும்போது இதுபோன்ற பிரச்னைகள் நமது நாட்டை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்.

தற்போது, தனியாக ஹஜ் பயணம் செல்வதற்கு அனுமதி கேட்டு 1,300 முஸ்லிம் பெண்கள் விண்ணப்பித்துள்ளதை கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இவர்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்கும்படி மத்திய சிறுபான்மை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளேன். வழக்கமாக, ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பம் செய்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், இப்பெண்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கும்படியும், அவர்களை சிறப்பு பிரிவில் அனுமதிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன். இந்தியா இன்று முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டு கொண்டிருப்பது, பெண்களின் அறிவும், சக்தியும் இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை. எனவே, ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமையும், வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். ” என்றுள்ளார்.

0 Responses to முஸ்லிம் பெண்கள் ஆண்களின் துணையின்றி ஹஜ் யாத்திரைக்கு தனியாக செல்லலாம்: மோடி அறிவிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.