Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள் இன, மத பேதமின்றி அனைத்து மக்களுடனும் ஒன்றிணைந்து தைப்பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுதலானது, சமாதானம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முக்கிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் பிரதமர் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை மக்களது வாழ்க்கையை முன்னேற்றிச் செல்லும் இத்தருணத்தில் இலங்கை மற்றும் உலகெங்குமுள்ள தமிழா்கள் உவகையுடன் கொண்டாடும் இப்பொங்கல் திருநாளானது மகிழ்ச்சிகரமாக, நன்றி செலுத்துகின்ற, மற்றும் மீளமைப்பிற்கான மக்கள் திருநாளாக அமைந்து, தமிழ் மக்களும், ஏனைய சமூகத்தவா்ககளும் ஒன்றுபட்டு எதிர்கால இலங்கையின் சமாதானத்திற்காக உறுதிபூணும் ஒர் தேசிய நல்லிணக்க தினமாக அமைகின்றது.

உலகத்தின் மிகப் பழமையான நாகரிகத்தைக்கொண்ட தமிழர்கள், உழவுத் தொழிலைப் போற்றி, எருதுகள், கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கின்ற வகையில், அறுவடைத் திருநாளைத் தைப்பொங்கல் திருவிழாவாக நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்றனர். இயற்கையின் பெறுமதி சமத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவம்., நன்றி தெரிவிக்கும் உயரிய பண்பு போன்ற அனைத்து மதங்களினதும் மனித நேயக்கருத்துக்களை தைப்பொங்கல் பண்டிகை எமக்கு எடுத்தியம்புகின்றது. தமிழர்கள் இன மத பேதமின்றி அனைத்து மக்களுடனும் ஒன்றினைந்து தைப்பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுதலானது சமாதானம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முக்கிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது.

இயற்கையுடன் தொடர்புறும் போது அதன் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும் இன மத பேதங்களைத் தாண்டி சமாதானம் சதோதரத்துவம் மேலோங்கும் மனித சமூகமொன்றை உருவாக்கவும் இம்முறை தைப்பொங்கல் பண்டிகை முன்மாதிரியாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். தைப் பொங்கல் பண்டிகைனயக் கொண்டிடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றுள்ளது.

0 Responses to தைப்பொங்கல் திருநாள் சமாதானத்துக்கான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது; பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ரணில்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.