தஞ்சையில் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து ஆய்வுக்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலாருக்கு எதிராக தி.மு.க.வினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் மாவட்டந் தோறும் ஆளுநர் பன்வாரிலால் சுற்றுப் பயணம் செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதை தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே கோவை, நெல்லை, குமரி, சேலம், கடலூர் ஆகிய இடங்களில் கவர்னர் ஆய்வு நடத்திய போது தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கவர்னர் பன்வாரிலால் நேற்று தஞ்சைக்கு வந்தார். தஞ்சையில் ஆளுநரின் ஆய்வை கண்டித்து ஆளுநருக்கு தி.மு.க. சார்பில் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்.
ஆளுநர் வருவதற்கு முன்னதாக இன்று காலை 09.00 மணியளவில் புதிய பஸ் நிலைய பகுதியில் ஏராளமான தி.மு.க.வினர் கறுப்பு சட்டை அணிந்தப்படி , கைகளில் கறுப்புக் கொடியுடன் திரண்டு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0 Responses to ஆளுநருக்கு எதிராக தஞ்சையில் தி.மு.க. கறுப்புக்கொடி போராட்டம்!