ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“புளொட் அமைப்பை மீண்டும் மீண்டும் சிவராம் படுகொலையுடன் சம்பந்தப்படுத்த சிலர் முயன்று வருகின்றனர். ஆனால், எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக தெரிவித்து எமது அமைப்பைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்ட போதும், அவர் நிரபராதி என்று ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.” என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் புளொட்டுக்கு தொடர்பில்லை: தர்மலிங்கம் சித்தார்த்தன்