Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பிக்கவுள்ளார்.

பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், அன்றிலிருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இராமேஸ்வரத்திலுள்ள அப்துல் கலாமின் வீட்டிலிருந்து கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கலாமுக்கு கனவுகள் பல இருந்தன. அவரைப் போலவே பல கனவுகளை கொண்டவன் நான். திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல; அது நாடு தழுவியது. விமர்சிப்பது மட்டுமே என் வேலையல்ல இறங்கி வேலை செய்ய வந்தவன் நான். மிகப் பெரிய சரித்திரமும், தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to அப்துல் காலம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறார் கமல்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.