Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கச்சதீவு அந்தோனியார் திருவிழா இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு உதவும் என்று யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு அந்தோனியார் தேவாலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், இந்திய பக்தர்கள் முதற்தடவையாக வருகை தந்தமை சிறந்த முன்னேற்றமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கச்சதீவு அந்தோனியார் திருவிழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் பேசும் போதே, இந்தத் திருவிழாவின் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவு வலுவாகும் என்றும் இந்திய துணைத் தூதர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வருடாந்தம் நடைபெறும் அந்தோனியார் திருவிழாவிற்கு இந்திய அரசும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றது. மீனவர்களைப் பொறுத்தவரை அவர்களும் இந்தத் தடவை சுமார் இரண்டாயிரம் பேர் வருகை தந்ததுடன் ஆலயத்திற்குக் கொடிக்கம்பத்தையும் வேறு பல பரிசுப் பொருள்களையும் வழங்கியுள்ளனர். மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இரு நாட்டு அரசுகளும் மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்றன. இந்தப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே வெகு விரைவில் மீனவப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று எட்டப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to கச்சதீவு அந்தோனியார் திருவிழா இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு உதவும்: இந்திய துணைத் தூதர்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.