காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவால் இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவால் இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு இருந்தது.
அவர் ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மடத்தின் நிர்வாகிகள் கூறியுள்ளனர். அவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல்நல குறைவால் அவர் இன்று காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

0 Responses to சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவால் மறைவு!