Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடிகர் கமல்ஹாசன் தலைப்பு செய்தியாக இருக்கலாமே தவிர, தலைவராக முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று புதன்கிழமை மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்ய உள்ளார். கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன் தனது நண்பர்கள் மற்றும் மூத்த அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணத்தை விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பதாவது:- “கமல் தலைப்பு செய்தியாக இருக்கலாமே தவிர, தலைவராக முடியாது. திரைப்பட போட்டியை போல் கமல் அரசியல் கட்சி தொடங்குகிறார்” என்றார்.

0 Responses to கமல்ஹாசன் தலைப்புச் செய்தியாகலாம்; ஆனால், தலைவராக முடியாது: தமிழிசை சௌந்தரராஜன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.