Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவாவில் இன்று இடம்பெற்று வரும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் 2 ஆவது அமர்விலும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை இன்னொருவர் சாடியுள்ளன.

இந்தியா கூறுகையில் ஒரு தோல்வியுற்ற நாடான பாகிஸ்தானிடம் இருந்து உலகம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் மும்பை, பத்தான்கோட் மற்றும் ஊரி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட மோசமான தீவிரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர்களைப் பாகிஸ்தான் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்ற அழுத்தத்தையும் இந்தியா முன் வைத்தது. ஒசாமா பின்லேடனுக்கே பாதுகாப்பு அளித்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது என்றும் இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது. முன்னதாக ஜெனீவாவில் ஐ.நா இன் பாகிஸ்தானுக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியான டாஹிர் அண்ட்ராபி வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில் ஜவஹர்லால் நேருவின் காலத்தில் இருந்தே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றிருந்தார்.

பதிலுக்கு இந்தியா சார்பான பிரதிநிதியான குமும் கருத்துத் தெரிவிக்கையில் 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 இல் லாஹூர் பிரகடனம் ஆகியவை அமுலில் இருக்கும் பட்சத்திலும் பாகிஸ்தான் இந்தியாவில் எல்லை கடந்த தீவிரவாதத்துக்கு ஆதரவளித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். லாஹூர் பிரகடனத்தின் கீழ் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவொருக்கு ஒருவர் அணுவாயுதப் போட்டியை மேற்கொள்வது இல்லை என்று ஒப்பந்தம் எட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாகிஸ்தான் தரப்பிலும் காஷ்மீரில் இந்தியாவும் யுத்த நிறுத்த மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப் பட்டு வருகின்றது.

0 Responses to ஐ.நா அமர்வின் 2 ஆம் நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் சாடல்

Post a Comment

Followers