சிரிய உள்நாட்டுப் போரில் கடந்த இரு வாரங்களில் மட்டும் நூற்றுக் கணக்கான சிறார்கள் உட்பட 800 இற்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று லடாகியா மாகாணத்தில் உள்ள ஹேமிமிம் விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தொழிநுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 33 பயணிகள் மற்றும் 6 குழு உறுப்பினர்கள் அடங்கலாக 39 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தகவலை ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு செய்திகள் உறுதி செய்துள்ளன. அண்மைக் காலமாக அதிகரித்துள்ள சிரிய உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இறுதிப் பகுதியையும் கைப்பற்றுவதற்கான தொடர்ச்சியான யுத்தத்தை சிரிய அரசும் ரஷ்ய விமானப் படைகளும் மேற்கொண்டு வருகின்றன.
ஐ.நா இன் 30 நாட்களுக்கான அமைதி ஒப்பந்தத்தை குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்கு மட்டுமே ரஷ்யா ஏற்றுக் கொண்ட போதும் யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே உள்ளன. மேலும் சிரியாவும் யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

0 Responses to சிரியாவில் ரஷ்ய சரக்கு விமானம் வீழ்ந்து விபத்து!: 39 பேர் வரை பலி