Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த பல தசாப்தங்களாக மேற்கொள்ளப் பட்டு வந்த பேச்சுவார்த்தைக்குப் பின் ஆப்கானிஸ்தான் தனது மண்ணின் நிலப் பரப்பின் கீழ் செல்லும் $ 7.5 பில்லியன் டாலர் பெறுமதியான எரிவாயுக் குழாய்த் திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஆப்கானில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில நிலப் பகுதிகளின் ஊடாகவும் இக்குழாய் செல்கின்றது. ஆச்சரியப் படத்தக்க வகையில் இத்திட்டத்துக்கு எம்மால் ஒரு பாதிப்பும் ஏற்படாது எனத் தலிபான்கள் அறிவித்துள்ளனர். TAPI எனப்படும் 500 மைல் நீளமான இந்த எரிவாயுக் குழாய் துர்க்மென்ஸ்தானில் தொடங்கி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாகச் செல்கின்றது.

மேலும் இந்த நிலக்கீழ் குழாயினூடாக வருடாந்தம் 33 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயு பரிமாற்றப் படவுள்ல்து. இதன் நிர்மாணம் தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்த போதே தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் அது தலிபான்களுக்கும் ஆப்கான் அரசுக்கும் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் வலுச் சேர்க்கும் என்றும் நம்பப் படுகின்றது.

இதுதவிர இத்திட்டத்தினால் ஆப்கானில் ஆயிரக் கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறவுள்ளதுடன் ஆப்கான் அரசுக்கு வருடாந்தம் $ 400 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை வருமானம் கிடைக்கவும் உள்ளது.

இதேவேளை கடந்த வருடம் ஆப்கானில் தலிபான்களின் தாக்குதலால் 10 000 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமது நிலப் பரப்பின் கீழ் செல்லும் $ 7.5 பில்லியன் டாலர் எரிவாயுக் குழாய்த் திட்டத்துக்கு தலிபான்கள் சம்மதம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.