தனது 76 ஆம் வயதில் கடந்த மார்ச் 14 ஆம் திகதி இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் நகரத்திலுள்ள தனது வீட்டில் இந்த நூற்றாண்டின் மிகப் பிரபலமான இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்கிங் உயிரிழந்திருந்தார். இவரின் இறுதிச் சடங்கு அமைதியான முறையில் இன்று சனிக்கிழமை இங்கிலாந்தில் இடம்பெற்றது.
பல நூற்றுக் கணக்கான மக்களும் முக்கிய சில பிரபலங்களும் பங்கு பற்றிய இந்த நிகழ்வில் ஸ்டீபன் ஹாவ்கிங்கின் உடல் அடங்கிய சவப்பெட்டியை அவர் ஆராய்ச்சிப் பணி மேற்கொண்டிருந்த கோன்வில் மற்றும் காயஸ் கல்லூரியில் இருந்து தேவாலயத்துக்கு 6 பேர் சுமந்து சென்றனர். இந்த 6 பேரிலும் ஹாவ்கிங்கின் 3 குழந்தைகளான லூசி, ராபர்ட் மற்றும் டிம் ஆகியோருடன் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் அடங்குகின்றனர். ஸ்டீபன் ஹாவ்கிங்கின் சவப் பெட்டிக்கு மேலே பிரபஞ்சத்தைக் குறிக்கும் அல்லி மலர்கள் மற்றும் துருவ நட்சத்திரத்தைக் குறிக்கும் வெள்ளை ரோஜாக்கள் சாத்தப் பட்டிருந்தன.
சவ்ப்பெட்டி மேலே தூக்கப் பட்டவுடன் அங்கு கூடியிருந்த பொது மக்கள் கண்ணீருடன் கரவொலி அஞ்சலி செய்தனர். மேலும் ஹாவ்கிங் இன் மூத்த மகன் ராபர்ட்டும் முன்னால் மாணவர் பே டூக்கர் மற்றும் வானியல் அறிஞர் மார்ட்டீன் ரீஸ் ஆகியோர் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வின் போது சிறப்புரை ஆற்றினார்கள். ஹாவ்கிங் இன் உடல் தேவலாயத்தை வந்தடைந்ததும் அவரின் வாழ்க்கையில் மிகப் பெரும்பாலான வருடங்கள் மோட்டார் நியூரோன் நோயினால் மிகச் சவாலானதாக விளங்கியதால் அவரின் வயதைக் குறிக்கும் விதத்தில் 76 முறை மணி அடிக்கப் பட்டது.
ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே ஹாவ்கிங் இன் சாம்பல் அடக்கம் செய்யப் படும் எனத் தெரிய வருகின்றது.

0 Responses to மறைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்கிங்கின் இறுதிச் சடங்கு