ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் இந்த மாதத்திற்குள் மாற்றம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கட்சியின் முக்கிய பதவிகளில் இம்மாதத்திற்குள் மாற்றம் செய்யப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தங்களை நியமிக்குமாறு பெரும்பாலானோர் கட்சியின் தலைமையிடம் கோரியுள்ளதாகவும் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

0 Responses to ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளில் சில நாட்களில் மாற்றம்!