ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி, இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் வந்தார்.
இந்த நிலையிலேயே, ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இறுதி யுத்தத்தின் போது அருட்தந்தை பிரான்சிஸினால் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என கோஷமெழுப்பியவாறு உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

0 Responses to ஜனாதிபதியின் யாழ். வருகையை எதிர்த்துப் போராட்டம்!