Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் இன்று திங்கட்கிழமை அமெரிக்காவுக்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

தனது பயணத்தை ஆரம்பிக்கும் சமயத்தில் ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் பெண்கள் ஆண்களுக்கு முற்றிலும் சமனானவர்கள் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பயணத்தின் போது அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள பின் சல்மான் பல முக்கிய அமெரிக்க நகரங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை CBS செய்தி ஊடகத்தின் 60 நிமிடங்கள் என்ற நிகழ்ச்சிக்காக முடிக்குரிய இளவரசரிடம் பெண்கள் ஆண்களுக்குச் சமனானவர்களா என்று கேட்கப் பட்ட போதே அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். அதாவது நாம் அனைவரும் ஒரே மனித இனம் தான். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே எந்தவொரு பேதமும் இல்லை. இருவரும் சமனானவர்களே என்றுள்ளார் அவர்.

இஸ்லாமுக்கு முன்பு சவுதியில் நிலவி வந்த பல்வேறு வகையான மூட நம்பிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாகத் தான் பெண்கள் அங்கு நூற்றாண்டுக் காலமாக அடிமைகளாக நடத்திப் பட்டு வந்துள்ளனர் என்றும் உண்மையான இஸ்லாம் மதம் அனைத்துப் பெண்களுக்குமான அடிப்படை உரிமைகளை வலியுறுத்துவதாகவும் இளவரசர் தெரிவித்ததாக நியூயோர்க் டைம்ஸ் இல் செய்தி வெளியாகி உள்ளது.

1979 இற்குப் பின் சவுதியில் பரவிய கன்செர்வாட்டிஸம் (Conservatism) என்ற கொள்கையினால் தனது தலைமுறைப் பெண்கள் வெகுவாக உரிமைகள் மறுக்கப் பட்டு வந்தது உண்மை என்றும் இளவரசர் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக பின் சல்மானின் உத்தரவின் பேரில் சவுதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுதல், விளையாட்டுப் போட்டிகளைப் பார்த்தல், விரும்பிய அதே நேரம் கலாச்சாரத்துக்குப் புறம்பில்லாத ஆடைகளை அணிதல் போன்றவை உட்பட முக்கிய உரிமைகள் அளிக்கப் பட்டன. ஆனால் இன்னமும் சவுதியில் 90% வீதமான பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டு ஆணாதிக்கம் நிலவும் ஒரு சமூகத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பெண்கள் ஆண்களுக்கு முற்றிலும் சமனானவர்களே! : சவுதி இளவரசர் மொஹம்மட் பின் சல்மான்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.