வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் கைச்சாத்திட்ட அதிபருக்கான குறிப்பாணை (Presidential Memorandum) இன் மூலம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் அனைத்துப் பொருட்களுக்குமான தீர்வை வரி $60 பில்லியன் டாலர்களாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
டிரம்பின் இந்த நடவடிக்கை காரணமாக உலகளாவிய ரீதியில் வணிகப் போர் (Global Trade War) ஒன்று உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த குறிப்பாணையின் படி சீனாவில் இருந்து இறக்குமதியாகும் சுமார் 1300 உற்பத்திப் பொருட்கள் குறிப்பிட்ட மீளாய்வு காலத்துக்குப் பின்பே நுகர்வோருக்கு அனுமதிக்கப் படவுள்ளதால் இந்த அளவீடானது சட்ட வல்லுனர்கள் மற்றும் தொழில் துறை தரகர்களால் பெறுமதி குறைக்கப் படவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கைக்குப் பதிலளிக்க சீனா சற்றுக் காலம் எடுத்துக் கொள்ளும் என்றும் உடனடிப் பழிவாங்கும் நடவடிக்கைகளால் பயன் ஏதும் இல்லை என்றும் கணிப்பிடப் பட்டுள்ள நிலையில் அதிபர் டிரம்ப் இன்னமும் சீனாவை நண்பனாகவே பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் டிரம்ப் கூறுகையில் சீனாவுடன் இது தொடர்பில் தாம் பேசி விட்டோம் என்றும் தற்போது பேச்சுவார்த்தையின் மையத்தில் அமெரிக்காவும் சீனாவும் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முன்னர் நிலவிய பாரபட்சமான வர்த்தகம் மூலம் தான் பல அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர் என்றும் அதுவும் 2016 தேர்தலில் தான் தேர்வாவதற்குப் பிரதான காரணங்களில் ஒன்று என்றும் டிரம்ப் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா சீனாவுடன் $ 375 பில்லியன் டாலர் பெறுமதியான வணிகப் பற்றாக்குறையை அண்மைக் காலங்களில் ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to டிரம்பின் சீனாவுக்கான தீர்வை வரித் திட்டத்தால் பூகோள வணிகப் போர் மூளும் அபாயம்