Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னமும் 3 நாட்கள் அவகாசம் இருக்கிறது. எனவே மத்திய அரசின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நீருக்காக அதிக முறை போராடிய இயக்கம் அ.தி.மு.க தான் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடனேயே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றினோம். மேலும் நிரந்தர தீர்வான காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர இடைக்கால ஏற்பாடாக செய்யப்படும் வேறு எதையும் ஏற்கமாட்டோம் என மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை முடக்கி போராடி வருகின்றனர். ஜெயலலிதாவின் வழியில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதே எங்களின் குறிக்கோள் என்றார் அமைச்சர் ஜெயக்குமார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார கால நீதிமன்ற அவகாசத்தில் இன்னும் 3 நாட்கள் இருக்கிறது. பார்ப்போம் மத்திய அரசு என்ன செய்கிறதென்று. ஏனெனில் ஒரே நாள் இரவில் கூட என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.

0 Responses to காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்னும் முடியவில்லை: ஜெயக்குமார்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.