தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “காவிரிக்காக கருத்து வேறுபாடு மறந்து, அனைத்துக்கட்சி கூடி தீர்மானம் நிறைவேற்றினோம். முதலமைச்சர் தலைமையிலான குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது. காவிரி விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்திக்க மத்திய அரசு கூறியது.
நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு சந்திப்பதாக பிரதமர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையிலான குழுவை சந்திக்க பிரதமர் மறுக்கவில்லை. 6 வாரங்களில் 2 வாரங்கள் முடிந்து உள்ளன. இன்னும் 4 வாரங்கள் உள்ளன அதற்குள் நாம் எதையும் அவசரப்பட்டு கூறவேண்டாம்.” என்றுள்ளார்.

0 Responses to அனைத்துக் கட்சிக் குழுவை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக கூறுவது பொய்: ஜெயக்குமார்