மூன்று தசாப்த யுத்தத்தினால் பின்னடைந்துள்ள வடக்கின் கல்வித் துறையை முன்னேற்றுவதற்காக விசேட பத்து வருடத் திட்டமொன்றை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்பு கல்வித்துறையில் கொழும்பு மாவட்டமும் யாழ். மாவட்டமுமே முன்னணியில் திகழ்ந்ததாக குறிப்பிட்ட பிரதமர், யுத்தத்தினால் வடக்கின் கல்வித்துறை பின்னடைவு கண்டுள்ளதாகவும், 1983க்குப் பின் பெருமளவு கல்வியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படை ஆசிரியர்களாக பணிபுரிந்த 324 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்