Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பிரான்ஸின் பாரிஸின் டிரேப்ஸ் என்ற நகரத்துக்கு அருகே உள்ள சூப்பர் யூ என்ற பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த ISIS தீவிரவாதி ஒருவன் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை மூவர் பலியாகி உள்ளதாகவும் கிட்டத்தட்ட 8 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திருடப் பட்ட கார் ஒன்றின் மூலம் வந்து தான் குறித்த தீவிரவாதி உள்ளே நுழைந்துள்ளான். இதுவரை பிணைக்கைதிகள் விடுவிக்கப் படாத நிலையில் கிட்டத்தட்ட 30 இற்கும் அதிகமான இராணுவ அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளதுடன் 3 ஹெலிகாப்டர்கள் அப்பகுதியைக் கண்காணித்தும் வருகின்றன. பிணைக் கைதிகளில் யாரும் இதுவரை மரணமடையாத போதிலும் தீவிரவாதியின் கோரிக்கை என்ன என்று கேட்கப் பட்டுள்ளது.

இதேவேளை சமீபத்தில் வெளியான தகவலில் குறித்த துப்பாக்கி தாரி சுட்டுக் கொல்லப் பட்டு விட்டதாகவும் இந்த மீட்பு நடவடிக்கையின் போது இருவர் காயம் அடைந்தும் உள்ளதாகவும் பிரான்ஸ் போலிசார் அறிவித்துள்ளனர். தற்போது பிணைக் கைதிகளாக இருந்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாகவும் இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் எனவும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தற்போது ஐரோப்பிய யூனியன் மாநாட்டுக்காக புருஸ்ஸெல்ஸில் உள்ள மக்ரோன் விரைவில் நாடு திரும்பவுள்ளார்.

பின்னர் கிடைத்த தெளிவான தகவல்களின் படி தாக்குதலில் ஈடுபட்டது தனியொரு தீவிரவாதி என்றும் இவர் சூப்பர் மார்க்கெட்டுக்கு வர முன்பு 3 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் தான் மூவர் பலியானதாகவும் இருவர் காயம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

0 Responses to பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் தீவிரவாதத் தாக்குதல் : துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.