நாட்டில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மண், கல் மற்றும் மண் விற்பனையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகத்தின் வெள்ளி விழா நேற்று திங்கட்கிழமை பத்தரமுல்லையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாம் வாழும் இந்த பூமியையும் இயற்கை மற்றும் சீவராசிகளையும் நேசித்து அவற்றை வளப்படுத்திப் பாதுகாக்கின்ற முக்கிய பொறுப்பு புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப்பணியகத்திற்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும் உரியதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இவ்விரண்டு நிறுவனங்களும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to சட்ட விரோத மண், கல் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை: ஜனாதிபதி