அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிழ எஃகு சுங்க வரிக்கொள்கை சர்வதேசத்தையும் அமெரிக்காவையும் வெகுவாகப் பாதிக்கும் எனவும் சர்வதேச அளவில் அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
மேலும் அமெரிக்காவுக்கு அதிகளவில் எஃகு ஏற்றுமதி செய்யும் கனடாவும் இரு நாட்டு எல்லைப் பகுதியில் இது பதற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்றுள்ளது.
அதிபர் டிரம்பின் முடிவானது யாருக்கும் பலனளிக்காத வர்த்தகப் போர் என உலக வர்த்தக அமைப்பு இயக்குனர் ஜெனரல் ராபர்டோ ஆஜீவெடோ தெரிவித்துள்ள நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் வர்த்தகப் போர்கள் நல்லது என்று டிரம்ப் டுவீட் இட்டுள்ளதும் விவாதங்களை அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்கா பிற நாடுகளுடன் செய்யும் வர்த்தகத்தால் பில்லியன் கணக்கான டாலர்களை இழந்து வருகின்றது என்றும் டிரம்ப் தனது டுவீட்டரில் கூறியுள்ளார். இந்நிலையில் இறக்குமதிக்கான சுங்க வரிகளை உயர்த்துவது என்பது அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பைப் பாதிக்காத போதும் நுகர்வோருக்கு சுமையை அதிகரித்து விடும் எனவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தற்போது அமெரிக்காவின் இந்த முடிவுக்குப் பதிலடி கொடுக கனடா, மெக்ஸிக்கோ, சீனா, ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் தயாராகி வருகின்றன. மேலும் டிரம்பின் வரி அதிகரிப்பானது முட்டாள் தனமானது என்று தெரிவித்துள்ள சீனா தம்மை முன்னுதாரணமாகக் கொண்டு பிற நாடுகள் செயற்பட்டால் சர்வதேச வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தியா தனது ஏற்றுமதி வர்த்தகத்தில் பின்னடைவை சந்தித்து வருவதால் இது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு வாய்ப்பாக உள்ளது. சர்வதேச களத்தில் சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக ரீதியில் அதிகளவு போட்டியிட்டு வருவதால் இந்தியா நடுநிலை வசிப்பதே அதற்கு உசிதம் என்றும் கூறப்படுகின்றது.
மறுபுறம் டிரம்பின் ஆட்சியில் அவரது திட்டங்களும் செயற்பாடுகளும் அதிகம் பலனளிக்காது அமெரிக்கப் பொருளாதாரமும் பாதிக்கப் பட்டுள்ளதால் 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் தோல்வியைச் சந்திப்பார் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

0 Responses to டிரம்பின் முடிவால் சர்வதேச அளவில் வர்த்தகப் போர் உருவாகும் அபாயம்