Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் (மார்ச் 29) முடிகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். அப்போது, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்பட உள்ளது.

காவிரி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், விசாரணை நடத்தி வந்தது. பின்னர், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையொட்டி தமிழகத்தில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

0 Responses to காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவு; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.