Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவுடன் சமரசப் பேச்சுவார்த்தைக்காக திங்கட்கிழமை தென்கொரியத் தூதுக் குழு ஒன்று வடகொரியா செல்லவுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

தென்கொரியாவின் ப்யாங்சாங் நகரில் அண்மையில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இரு கொரிய தேசங்களும் பாரபட்சத்தை மறந்து ஒன்றாகக் கலந்து கொண்டன.

இதனால் கொரியத் தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் சற்றுத் தணிந்தது. முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக அமெரிக்காவுடனான சமரசப் பேச்சுவார்த்தைக்கு தென்கொரியா அரசு 10 பேர் கொண்ட தூதுக்குழுவை திங்கட்கிழமை வடகொரியாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. மேலும் தென்கொரியாவின் இந்த 10 பேர் கொண்ட தூதுக்குழு அந்நாட்டு அதிபர் மூன் ஜே உன் இன் அறிவுறுத்தலின் பிரகாரமே வடகொரியாவுக்கு செல்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்காவுடன் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வடகொரியா செல்லும் தென்கொரியத் தூதுகுழு

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.