Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற கட்டுமான விழா ஒன்றில் கலந்து கொண்டு அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். இதன் போது அவர் சிரியாவில் இருந்து அமெரிக்க இராணுவம் விரைவில் மீளப் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ISIS தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 100% சதவீத நிலப்பகுதியும் விரைவில் கைப்பற்றப் படும் என்றும் அதனால் அமெரிக்கப் படை தாயகம் திரும்புவதில் சிக்கல் இருக்காது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு காரணமாக சுமார் சுமார் 7 டிரில்லியன் டாலர்கள் பணம் வீணடிக்கப் பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சிரியா போன்ற நாடுகளில் தம்மால் கட்டப் பட்டு வரும் பள்ளிக்கூடங்கள் திரும்பத் திரும்ப இடிக்கப் படுவதாகவும் இதற்குப் பதிலாக அமெரிக்காவின் ஓகியோ மற்றும் பென்சில்வேனியா அல்லது லோவாவில் இத்திட்டங்களை செயற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். மேலும் சிரியாவில் எண்ணெய் வளம் முழுதும் ISIS போராளிகள் கைக்கு செல்வதாகவும் எனவே அவற்றைக் கூட அமெரிக்கா பெற முடியாத சூழல் நிலவுவதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிரியாவில் இருந்து தமது படை விரைவில் மீளப் பெறப்படும், டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.