Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசின் அனைத்து நலத்திட்டங்களையும், நலிந்த மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் மாவட்ட ஆட்சியர்களே. ஆதலால் அவர்கள் தங்களது செயற்பாட்டினை, முழு முனைப்புடனும், கவனமுடனும் செய்திடல் வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சென்னையில் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழட்வில் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியவேளையில், அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழக அரசுப் பள்ளிக் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரிக்க வேண்டுமெனவும், இடைநிற்றல் அறவே தடுக்கப்பட வேண்டுமெனவும், அதற்கான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

பள்ளிகள் தோறும் இயங்கும் சத்துணவு மையங்கள், குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்கள், என்பன சரியான முறையில் இயங்குகின்றனவா என்பதையும், இந்த மையங்கள் குடிநீர் , மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் குறைகளின்றி இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலனுக்காக தொடங்கப்பட்டுள்ள, கட்டணமில்லா வண்டல் மண் வழங்கும் திட்டத்தினை மேலும் சிறப்பாக செயற்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார்.

0 Responses to அரச நலத்திட்டங்களை மக்களிடம் சேர்ப்பவர்கள் மாவட்ட ஆட்சியர்களே - தமிழக முதல்வர்

Post a Comment

Followers