Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு ஆப்பிரிக்காவின் 2 ஆவது அதிக மக்கள் தொகையும் நாற் புறமும் நிலத்தால் சூழப் பட்டதுமான நாடு எத்தியோப்பியா. ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்த நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபா ஆகும். தற்போது இதன் புதிய பிரதமராக அபிய் அகமது என்பவர் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

முன்னால் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் ஆட்சியில் நிலவிய குறைபாட்டினால் அவர் பதவி விலகக் கோரி எத்தியோப்பியாவில் 3 ஆண்டுகளாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்தன. இதற்கு உரிய தீர்வு காண இயலாத அவர் பெப்ரவரு 16 ஆம் திகதி ராஜினாமா செய்தார். இதையடுத்து எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணிக் கூட்டணியைச் சேர்ந்த 180 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒருமனதாக அபிய் அகமது என்பவரைத் தேர்வு செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மறுபுறம் மியான்மாரின் புதிய அதிபராக பாராளுமன்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று வின் மியிண்ட் என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். முன்னால் அதிபரான 71 வயதாகும் ஹிதின் கியா உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.இதை அடுத்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 2/3 பங்கு வாக்குகள் பெற்று வின் மியிண்ட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

0 Responses to எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அகமது மற்றும் மியான்மாரின் புதிய அதிபராக வின் மியிண்ட் தேர்வு

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.