Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“யார் காணாமல் போவார்கள் என்பதை தேர்தலுக்கு பின் பார்க்கலாம்.” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்பொழுது, விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து காணாமல் போனதுபோல் கமலும் காணாமல் போவார் என பேசினார்.

இந்த நிலையில், வேலூர் அரியூரில் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழா ஒன்றில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்பொழுது முதல் அமைச்சர் பேசியது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜயகாந்த், யார் காணாமல் போவார்கள் என தேர்தலுக்கு பின் பார்க்கலாம் என்று கூறினார்.

0 Responses to யார் காணாமல் போவார்கள் என்பதை தேர்தலுக்குப் பின் பார்க்கலாம்; பழனிசாமிக்கு விஜயகாந்த் பதில்!

Post a Comment

Followers