Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்றைய தினம் (மார்ச் 4) சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற மக்கள் கருத்துக் கணிப்பு வாக்களிப்பில் கருத்துச் சுதந்திரத்துக்கான தங்கள் ஆதரவினைத் தெரிவித்திருக்கிறார்கள். தேசிய ஊடகங்களின் பாவனைகளுக்காக வசூலிக்கபடும் கட்டணத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட, சட்ட அமைவுக்கு எதிராக ( No Billag ) " No" என வாக்களித்து, இந்தச் சட்ட முன்மொழிவினை மறுதலித்துள்ளார்கள்.

நாடுதளாவிய ரீதியில் 71. 6 வீதமான மக்கள் இல்லை என வாக்களித்து இத்திட்டத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்கள். பிரேஞ் மொழி பேசும் 'நௌஷத்தல்' மாநிலத்தில் 78.3 வீதமாகவும், 'யூரா' மாநிலத்தில் 78.1 வீதமெனவும், அதிக மக்கள் ஆதரவு தெரிவித்துத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சட்டவாக்கதிற்கு எதிராக மக்கள் வாக்களித்ததன் மூலம், தேசிய ஊடகங்களின் கருத்துச் சுதந்திரம் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், ஆயிரக் கணக்கான ஊடகத்துறை சார்ந்தோர், வேலையிழக்கும் அச்சம் நீங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை தேசிய ஊடகத்துறை சார்ந்தோர், மார்ச் 4ல் நாம் மீண்டும்
புதிதாய் பிறந்தோம் என மகிழ்வோடு கூறுகின்றார்கள்.

0 Responses to கருத்துச் சுதந்திரத்தை காப்பாற்றிய சுவிஸ் மக்கள்

Post a Comment

Followers