நேபாலின் காத்மண்டு விமான நிலையத்தில் 139 பயணிகளுடன் வியாழக்கிழமை மாலை புறப்பட்ட மலேசியாவின் மலிண்டோ ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று ரன்வேயில் கட்டுப்பாட்டை இழந்து சேற்றில் இறங்கியது.
காத்மண்டுவின் ஆபத்தான ரன்வேயில் இடம்பெற்ற இவ்விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருந்த போதும் 12 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக வெள்ளிக்கிழமைக்குப் பின்பும் காத்மண்டு விமான நிலையம் செயலிழந்து காணப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர். போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து ரன்வேயில் சிக்கியதால் காத்மண்டுவின் திரிபுவான் விமான நிலையத்துக்கு வந்த நூற்றுக் கணக்கான பயணிகளின் விமானங்கள் திசை திருப்பப் பட்டன.
குறித்த விமானம் டேக் ஆஃப் ஆக சில நிமிடங்கள் இருந்த போது விமானிகள் ஒரு தொழிநுட்பக் கோளாறைக் கண்டு பிடித்ததால் அவசர அவசரமாக அதன் பயணத்தை ரத்து செய்தனர். இதனால் தான் அது ரன்வேயில் சேற்றில் சிக்கி நிறுத்தப் பட்டது எனப் பின்னர் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம் நேபாலின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான திரிபுவான் இன் சேவைகள் வழமைக்குத் திரும்பின. இமய மலைத் தொடருக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த திரிபுவான் விமான நிலையத்தின் ரன்வேக்கள் அனைத்தும் மிகவும் குறுகியதாகவும் சிக்கலானவையாகவும் இருப்பதால் மிகவும் நிபுணத்துவம் மிக்க பைலட்டுக்கும் இதில் விமானத்தை உடனடியாக நிறுத்துவது என்பது சவாலான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to காத்மண்டு விமான நிலைய ரன்வேயில் கட்டுப்பாடு இழந்த மலேசிய விமானம்! : விமான நிலையம் 12 மணித்தியாலம் மூடல்