Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜி.எஸ்.பி வரி சலுகையை 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மார்ச் 23இல் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகை இம்மாதம் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி) 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகிய நிலையில் அதன் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை.

இதன் விளைவாக ஜி.எஸ்.பி கடந்த 2017ஆம் ஆண்டுடன் காலாவதியாகியதால், இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் எற்றுமதிகளுக்கு ஜனவரி 01, 2018 முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், மீண்டும் அந்த வரிச் சலுகையை வழங்குவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக ரிசாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.