ஞாயிற்றுக்கிழமை ஈரானின் மேற்கே கேர்மன்ஷா என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சில கட்டடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தும் 54 பேர் வரை படுகாயம் அடைந்தும் உள்ளனர். ஈரானின் அவசர கால அமைப்பின் தலைவர் ரிசா இந்த நிலநடுக்கம் குறித்து கூறுகையில் இதுவரை உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஞாயிறு இரவு டெஹ்ரானுக்கு அண்மைய பகுதியில் 4.2 ரிக்டரில் இன்னொரு நிலநடுக்கமும் உணரப் பட்டதால் பொது மக்கள் அச்சத்திலுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இதே பகுதியில் 7.3 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 500 பேர் வரை பலியாகியும் 8000 பேர் வரை காயம் அடைந்தும் இருந்தனர். மேலும் பலத்த சேதமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்